உலகம்

எல் சால்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

செய்திப்பிரிவு

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “எல் சால்வடாரில் புதன்கிழமை நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் தென்கிழக்கில் 24 கிலோ மீட்டர் தொலைவில் 72 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அதிர்வுகளுக்கு அஞ்சி பொதுமக்கள் வீதிகளில் ஓடி வந்தனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில்  நிலநடுக்கத்தினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் எல் சால்வடார் அதிபர் நாயிப் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT