உலகம்

72 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் திறக்கப்படவுள்ள இந்து கோயில்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் அமைந்துள்ள, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்து கோயில் ஒன்று, 72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானின் சியால்கோட் நகரத்தில் உள்ள ஷவாலா தேஜா கோயில், சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினை காரணமாக 72 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இக்கோயில் பல்வேறு காலகட்டங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகியது. 

மேலும் 1992-ம் ஆண்டு இந்தியாவில் பாபர் மசூதி பிரச்சினை நிலவும்போது, கும்பல் ஒன்றால் இந்து கோயில் தாக்குதலுக்கு உள்ளானது. சுமார் 72 அண்டு காலம்  சீல் வைக்கப்பட்டிருந்த இக்கோயில் தற்போது பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளதாகவும் இதற்கான தீவிர ஏற்பாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இறங்கியுள்ளதாகவும் அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பொதுமக்கள்  எந்த நேரத்தில் கோயிலுக்கு வந்து வழிபடலாம் என்று காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் புனரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும்  பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் உள்ளிட்ட  பல பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இம்முயற்சி இரு நாடுகளின் நட்புணர்வுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

SCROLL FOR NEXT