வெஸ்லி மேத்யூ 
உலகம்

இந்தியா சிறுமி ஷெரின் கொல்லப்பட்ட வழக்கு: சிறையில் அடைக்கப்பட்டார் வளர்ப்பு தந்தை

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் இந்தியச் சிறுமி ஷெரின் மேத்யூ கொல்லப்பட்ட வழக்கில் அவரது வளர்ப்புத் தந்தை வெஸ்லி மேத்யூ சிறையில் தனக்கு விதிக்கபட்டிருக்கும் சிறைத் தண்டனையை அனுபவிக்க தொடங்கி இருக்கிறார். 

அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மேத்யூவை (3 வயது, பேச்சுக் குறைபாடுடையவர்) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும், சில மணிநேரம் கழித்துச் சென்று பார்த்தபோது ஷெரினைக் காணவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெஸ்லி மேத்யூவின் வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சுரங்கப் பாதையில் சிறுமி ஷெரினின் உடலை அமெரிக்க போலீஸார் கண்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து வெஸ்லியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷெரினை அடித்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கில் முதலில் வெஸ்லி மேத்யூக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறை தண்டனையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த வெஸ்லி,   டல்லாஸ் சிறைச் சாலையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டதாக டல்லாஸ் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SCROLL FOR NEXT