சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியாகினர். பலர் மாயமாகினர்.
இதுகுறித்து சீன ஊடகங்கள், “சீனாவின் தென்மேற்குப் பகுதியில் காயிஜோ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகினர். பல வீடுகள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 500 மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் இதே பகுதியில் மதியம் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானார். 6 பேர் மாயமாகினர்.
தென் சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.