உலகம்

ஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு: இளைஞர் கைது

செய்திப்பிரிவு

ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தீ விபத்துக்குக் காரணமான இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள், ''ஜப்பானின் கிழக்குப் பகுதியில் உள்ள கியோடோ நகரத்தில் அமைந்துள்ள அனிமேஷன் நிலையத்தில்  வியாழக்கிழமை நடந்த தீ விபத்தில் நேற்று ஒருவர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தீ விபத்தை ஏற்படுத்திய ஷின்ஜி ஒபா என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் ஷின்ஜி ஒபாவும் காயப்பட்டிருக்கிறார்” என்றார். 

இந்நிலையில் ஷிண்டி ஒமாவின் யோசனைகளை அந்த அனிமேஷன் கம்பெனி திருடிவிட்டதால் பழிவாங்கும் எண்ணத்தில் இந்த விபத்தை ஏற்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு  ஜப்பான் மக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜப்பான் பிரதமர் இரங்கல்

இந்த விபத்து குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே கூறும்போது, “இந்த விபத்து என்னைப் பேசவிடாமல் செய்துவிட்டது. எனது ஆழ்ந்த வருத்தத்தை இந்த விபத்தில் பலியானவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர் விரைவாக  குணமாக எனது பிரார்த்தனைகள் உடனிருக்கும்” என்று தெரிவித்தார். 

ஜப்பானில் பெரும் உயிர்களைப் பலி கொண்ட கோர விபத்தாக இது பார்க்கப்படுகிறது. 
 

SCROLL FOR NEXT