நியூயார்க்கைச் சேர்ந்த ஆசியா சொசைட்டி அமைப்பு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 40 வயதுக்கு உட்பட்ட இளம் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் மிஷி சவுத்ரி, சஞ்சய் விஜய் குமார், ஆர்த்தி விக், மணிஷ் தாஹியா, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மிஷி சவுத்ரி தொழில்நுட்ப வழக்கறிஞர். ஆன்லைனில், குடிமக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். விஜய்குமார் ஸ்டார்ட் அப் வில்லேஜ் அமைப்பின் இயக்குநர் குழு தலைவராக உள்ளார். மணிஷ் தாஹியா எரிசக்தி துறை சார்ந்த நோபல் குழும நிறுவனத்தின் எனர்ஜி பிரிவு தலைவராக உள்ளார்.
ஆர்த்தி விக், ஒய்எஸ்பி நிறுவனத் தின் நிறுவனர். உலகின் முதல் யூனுஸ் சோஷியஸ் ஃபண்ட் நிறு வனத்தை மும்பையில் தொடங்கு வதற்கு காரணமாக இருந்தார். இந் நிறுவனம் இந்தியாவில் சமூக தொழில்முனைவோர் 7 பேருக்கு நிதியுதவி செய்து வருகிறது.