எகிப்தில் திவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 2 பேர் பலியாகினர். 5 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், “ எகிப்தில் சினாய்யில் உள்ள ஷேக் ஜுவைத் நகரில் இன்று (வியாழக்கிழமை) தீவிரவாதிகள் பாதுகாப்பு அதிகாரிகளை மையப்படுத்தி நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக எகிப்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எகிப்தின் உள்ள சினாய் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் எகிப்து அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியது முதல், அங்கு பாதுகாப்புப் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு தீவிரவாதிகளுக்கு எதிராக எகிப்து அரசு நடத்திய தாக்குதலில் 100 தீவிரவாதிகளுக்கு கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.