உலகின் இரண்டாம் பெரிய பணக்காரர் பெர்னர்ட் அர்னால்ட். | ஏ.பி. 
உலகம்

உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய பிரான்ஸ் நாட்டு செல்வந்தர்

செய்திப்பிரிவு

உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியவை புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில் பிரான்சின் LVMH நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 2-ம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பர்க் கூறியுள்ளது. 

அர்னால்ட் சொத்து மதிப்பு சுமார் 108 பில்லியன் டாலர்கள், பில்கேட்ஸ் சொத்து மதிப்பு சுமார் 107 பில்லியன் டாலர்கள்.  பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு பில் கேட்ஸ் 35 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை நன்கொடையாக அளித்ததால் 2ம் இடத்திலிருந்து பின்னடைவு கண்டார் என்று காரணம் கூறப்பட்டுள்ளது. 

1989 முதல் ஆர்னால்ட் எல்விஎம்எச் நிறுவனத்தின் சேர்மனாக இருந்து வருகிறார். ஆடம்பர பிராண்டுகளான லூயிஸ் வுயுட்டன், மற்றும் ஃபெண்டி ஆகியவை புகழ்பெற்ற பிராண்டுகளாகும்.  பெஸாஸ், கேட்ஸ், பஃபே ஆகியோருக்கு அடுத்த படியாக 4 இடத்தில் ஆர்னால்டை பணக்காரர்கள் பட்டியலில் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டிருந்தது. 4 ஆண்டுகளுக்கு  முன்பாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஆர்னால்ட் 13வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT