உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில், அனைத்து தம்பதிகளும் 2-வது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு வசதியாக ஒரு குழந்தை கொள்கையை தளர்த்துவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
சீனாவின் மக்கள் தொகை இப் போது 130 கோடியைத் தாண்டி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்திய மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டி உள்ளது.
மக்கள் தொகையைக் கட்டுப் படுத்துவதற்காக சீன அரசு ஒரு குழந்தை கொள்கையைக் கொண்டுவந்தது. தொடக்கத்தில் இதைக் கடுமையாக அமல்படுத் திய சீனா, படிப்படியாக அந்தக் கொள்கையை தளர்த்தி வருகிறது.
இதுதொடர்பாக தேசிய சுகாதார மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆணையம் (என்எச்எப்பிசி) சார்பில் இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், இரண்டு குழந்தை திட்டத்துக்கு பெரும்பாலான சீனர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இளம் தம்பதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
இதுகுறித்து பெகிங் பல்கலைக் கழக பேராசிரியர் லு ஜீஹுவா கூறும்போது, “திருத்தப்பட்ட குழந்தை கொள்கை திட்டத்தைச் செயல்படுத்த என்எச்எப்பிசி திட்ட மிட்டுள்ளது. ஆனால் அதற்காக கொள்கைகள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை வகுக்க வேண்டி உள்ளது. இதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். அநேகமாக அடுத்த ஆண்டில் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது” என்றார்.
பெகிங் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை ஆராய்ச்சி மைய பேராசிரியர் மு குவாங்ஜாங் கூறும்போது, “இப்போது குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
நாட்டின் ஆரோக்கியமான மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக இந்த விகிதத்தை மிதமான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது” என்றார்.
சீனாவில் வேலைக்கு செல் வோர் எண்ணிக்கை தொடர்ந்து 3-வது ஆண்டாக குறைந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு டன் ஒப்பிடும்போது, 2014-ல் வேலைக்கு செல்வோர் எண் ணிக்கை 37 லட்சம் குறைந்து காணப் பட்டதாக அந்நாட்டு புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தம்பதிகளில் ஒருவர், ஒரு குழந்தை குடும்பத்தைச் சேர்ந்தவ ராக இருந்தால் அவர்கள் 2-வது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக ஒரு குழந்தை கொள்கை 29 மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் ஏற் கெனவே தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.