உலகம்

வழுக்கி விழுந்தார் சீனியர் ஜார்ஜ் புஷ்: கழுத்து எலும்பு உடைந்தது

பிடிஐ

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (91) நேற்று முன்தினம் தனது கோடைகால இல்லத்தில் வழுக்கி விழுந்ததில் அவரது கழுத்து எலும்பு உடைந்து விட்டது.

இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக்ராத் தனது ட்விட்டரில், “ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ், மைனே பகுதியில் உள்ள இல்லத்தில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கழுத்து எலும்பு உடைந்தது. இப்போது அவர் போர்ட்லாந்தில் உள்ள மைனே மெடிக்கல் செண்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

பார்கின்சன் நோயால் (நரம்பு மண்டல செயலிழப்பு) பாதிக் கப்பட்டுள்ள புஷ்ஷால் நடக்க முடியாது. இதனால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் மேலும் சில நோயால் பாதிக்கப்பட்டுள் ளார்.

குடியரசு கட்சி சார்பில் ரீகன் அதிபராக இருந்தபோது 2 முறை துணை அதிபராக இருந்தவர் புஷ். பின்னர் இவர் 1989-ல் 41-வது அதிபரானார். இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷும் அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார்.

சீனியர் புஷ்ஷின் மற்றொரு மகனும் புளோரிடா மாகாண முன்னாள் ஆளுநருமான ஜெப் புஷ் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT