உலகம்

இந்திய குடிநீர் திட்ட ஒப்பந்தங்களைப் பெற அமைச்சர், அதிகாரிகளுக்கு ரூ.6 கோடி லஞ்சம்: அமெரிக்க நிறுவனம் ஒப்புதல்

பிடிஐ

இந்திய குடிநீர் திட்ட ஒப்பந்தங்களைப் பெற அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனம் ரூ.6 கோடி லஞ்சம் அளித்திருப்பது எப்.பி.ஐ. போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நியூஜெர்ஸி பகுதியைச் சேர்ந்த லூயிஸ் பெர்ஜர் நிறுவனம் கடந்த 1998- 2010 ம் ஆண்டுகளில் இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், குவைத் ஆகிய நாடுகளில் பல்வேறு திட்டங் களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றது.

அந்த திட்டங்களுக்கான ஒப்பந்தங் களை லஞ்சம் அளித்து பெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் லஞ்சம் கைமாறியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்திய திட்டங்கள்

இந்தியாவில் கோவா மாநிலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் அகற்றும் திட்டத்தை லூயிஸ் பெர்ஜர் நிறுவனம் பெற்று செயல்படுத்தி வருகிறது. இதேபோல அசாம் மாநிலம் குவாஹாட்டியில் குடிநீர் விநியோகத் திட்டத்தை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இரு திட்டங்களுக்கான ஒப்பந்தங் களையும் லூயிஸ் பெர்ஜர் நிறுவனம் லஞ்சம்கொடுத்து பெற் றிருப்பது எப்.பி.ஐ. விசா ரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்காக இந்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனம் ரூ.6 கோடி லஞ்சம் அளித்திருப்பதாக எப்.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. லஞ்சப் புகாரை ஒப்புக் கொண்டுள்ள லூயிஸ் பெர்ஜர், ரூ.17 கோடி அபராத தொகையை செலுத்த முன்வந்துள்ளது.

அமைச்சர் யார்?

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக 11 பக்க குற்றப் பத்திரிகையை எப்.பி.ஐ. அதிகாரிகள் நியூஜெர்ஸி நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தனர்.

அந்த குற்றப் பத்திரிகையின் முழுமை யான விவரங்கள் ஊடகங்களுக்கு அளிக்கப்படாததால் அமெரிக்க நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற இந்திய அமைச்சர், அதிகாரிகள் யார், யார் என்பது தெரியவில்லை.

இந்த விவகாரத்தால் கோவா மற்றும் அசாம் மாநிலங்களின் அரசியலில் பெரும் புயல் வீசக்கூடும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT