உலகம்

கிரீஸில் இன்று கடன் மீட்பு திட்ட வாக்கெடுப்பு: பங்கு சந்தைகளை பாதிக்கும் அபாயம்

செய்திப்பிரிவு

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் நாட்டில் இன்று கடன் மீட்புத் திட்டம் தொடர் பாக மக்களின் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

கிரீஸில் ஏற்பட்டுள்ள பொருளா தார நெருக்கடி சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பொருளாதாரம் முற்றிலும் சரிவதைத் தடுக்கும் நடவடிக்கை யாக சமீபத்தில் வங்கிகள் மூடப்பட்டன. ஏ.டி.எம்-களில் எடுக்கும் பணத்தின் அளவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் அந்நாட்டு மக்களைக் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளன.

ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவற்றிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் கிரீஸ் உள்ளது. குறிப்பாக, சர்வதேச நிதியத்துக்குச் சுமார் ரூ. 10,000 கோடிக்கு மேல் தவணையை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. அந்நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக அரசு மேற்கொள்ள வேண்டிய சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக பல நிபந்தனைகளை இந்த மூன்று அமைப்புகளும் விதித்தன.

இந்த நிபந்தனைகளை ஏற்பதன் மூலம் கிரீஸ் மக்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் ஸிப்ராஸ் கருதுகிறார். எனவே, இந்த நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்று முடிவுசெய்ய ஜூலை 5 வாக்கெடுப்பு நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்தார். அதன்படி இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடன்மீட்புத் திட்டம் தொடர்பாக நடை பெறும் வாக்கெடுப்பில் அதற்குச் சாதகமாக வாக்களிக்க வேண்டாம் என்று நாட்டு மக்களை பிரதமர் அலெக்சிஸ் ஸிப்ரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அப்போதுதான் ஐரோப்பாவில், கிரீஸ் மக்கள் தன்மானத்துடன் வாழமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரீஸ் வெளியேறுவது தொடர்பாக முடிவெடுக்கத்தான் இந்த வாக் கெடுப்பு என்று அவை கருது கின்றன. ஆனால், அதை அலெக்சிஸ் மறுத்திருக்கிறார்.

2010-ம் ஆண்டு கிரீஸுக்கு முதன்முதலாகப் பெரிய அளவில் நிதியை அளித்த இந்த அமைப்புகள், 2012-ல் மீண்டும் கடன் அளித்தன. தங்கள் நிபந்தனையில் இந்த அமைப்புகள் உறுதியாக இருப்பதற்கு முக்கியக் காரணம், கிரீஸை முன் உதாரணமாக கொண்டு மற்ற நாடுகளும் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்து வதில் தயக்கம் காட்டலாம் என்பதுதான். எனவே, கிரீஸை கடன் சுமையிலிருந்து மீட்கும் நடவடிக் கைகளை மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்ட இந்த அமைப்புகள், தங்களது கடுமை யான நிபந்தனைகளில் உறுதியாக உள்ளன.

இந்நிலையில் கடன் மீட்பு திட்டத்துக்கு ஆதரவாகவும், எதிரா கவும் ஏதென்ஸில் பேரணிகள் நடத்தப்பட்டன. இதில் இருதரப் புக்கு ஆதரவும், எதிர்ப்பும் சரிசம மாக இருந்தது. எனவே வாக்கெடுப்பு முடிவு மிகவும் ஆவலுடன் எதிர்பார்க் கப்படுகிறது. இதன் விளைவுகள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT