ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நேற்று தொடங்கியது. இதையொட்டி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 28 உறுப்பு நாடுகளில் 4 நாள்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்ய ஆதரவுப் படையினரின் தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில உள்ள நாடுகள் சந்தித்து வரும் நிதி நெருக்கடி பிரச்சினை ஆகியவற்றுக்கிடையே இந்த தேர்தல் நடைபெறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துள்ள நாடுகளின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவியிடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. அதன்படி பிரிட்டனுக்கு 73 இடங்களும், நெதர்லாந்துக்கு 26 இடங்களும் உள்ளன. இந்த உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.
பிரிட்டனில் நிஜெல் பாரேஜ் தலைமையிலான யு.கே. சுதந்திரக் கட்சியும், நெதர்லாந்தில் சுதந்திரக் கட்சியும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 751 உறுப்பினர்களுக் கான தேர்தல் வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரை நடை பெறும். தேர்தல் முடிவுகள் அதி காரப்பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவிக்கப்படும். இந்த தேர்த லில் வெற்றி பெறும் கட்சிகளின் உறுப்பினர்கள் புதிய ஐரோப்பிய ஆணையரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுவர்.