உலகம்

தன்பாலின தம்பதிக்கு திருமண கேக் மறுப்பு வழக்கு: ரூ.81 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பிடிஐ

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் வசித்து வரும் ரேச்சல் மற்றும் லாரல் பவ்மேன் இருவரும் பெண் தன்பாலின உறவாளர்கள். 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அப்போது பேக்கரி ஒன்றில் திருமண கேக் கேட்டனர்.

இருவரும் தன்பாலின தம்பதி யினர் என்று தெரிந்துகொண்ட அந்த பேக்கரியின் உரிமையாளர் அவர்களுக்கு கேக் தர மறுத்து விட்டனர். மேலும் தங்களுக்கு தன்பாலின திருமணத்தில் உடன்பாடில்லை என்றும் தெரிவித்தனர்.

அந்த தன்பாலின தம்பதியினர் நீதிமன்ற‌த்தில் வழக்கு தொடர்ந்த னர். அதனை விசாரித்த நீதிமன்றம் `தன்பாலின தம்பதியினர் என்ற காரணத்தினால் திருமண கேக் மறுக்கப்பட்டு அதனால் ஊடகங் களின் கவனத்தையும் பெற்றதால், அந்த தம்பதியினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே அவர்களுக்கு பேக்கரி உரிமையாளர் 81 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT