உலகம்

தீவிரவாத தொடர்பு சந்தேகம்: சீனாவில் இந்தியர் உட்பட சுற்றுலாப் பயணிகள் 20 பேர் கைது

ஏஎன்ஐ

சீனாவில் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டில் இந்தியர் உட்பட 20 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், 10 பேர் தென்னாப்பிரிக்கா நாட்டவர் ஒருவர் இந்தியர்.

கைது செய்யப்பட்டவர்களில் தென்னாப்பிரிக்காவில் உள்ள தனது உறவினர் ஒருவருக்கு இது தொடர்பாக தகவலை உடனடியாக தெரிவித்துள்ளார்.

அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 20 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சீனா கைது செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடுமையான விசாரணைக்குப் பிறகு 11 பேரை மட்டும் விடுவிக்க சீன போலீஸார் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியர் உட்பட மற்றவர்களை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சீனாவுக்கு எதிரான பிரச்சாரம் அடங்கிய வீடியோவை பார்த்தனர் என்பது தீவிரவாத குற்றச்சாட்டு.

SCROLL FOR NEXT