இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித்தை கடந்த 2014 ஜூனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அப்போது அங்கு சிறைபிடிக்கப்பட்ட 1700 ராணுவ வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்க கூட்டுப் படை யினரின் வான்வழி தாக்குதல் உதவியுடன் கடந்த ஏப்ரலில் திக்ரித் மீண்டும் அரசுப் படைகளின் வசம் வந்தது.
ராணுவ வீரர்கள் படுகொலை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு பாக்தாத் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.