உலகம்

கலாம் மறைவு: அமெரிக்க இதழ்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

நியூயார்க் டைம்ஸ்:

இந்தியாவின் அணுசக்தி திட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர் கலாம். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளாலும் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அவர் மக்களின் தலைவர், குறிப்பாக இளைஞர்களின் நாயகன்.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்:

சில நாடுகளே விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சுகின்றன. அந்தப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்தவர் கலாம். இந்திய ஏவுகணை திட்டங்களுக்கு முன்னோடியாக வழிகாட்டியவர்.

வாஷிங்டன் போஸ்ட்:

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளை சாமானிய மக்களுக்கும் திறந்துவிட்டவர் கலாம்.

SCROLL FOR NEXT