உலகம்

கிரீஸ் நாடாளுமன்றத்தில் சிக்கன மசோதா நிறைவேற்றம்

ஏபி

கிரீஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிக்கன நடவடிக்கை மசோதாவுக்கு பெருமபாலான எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கிரீஸைக் கடன் சிக்கலில் இருந்து மீட்கும் புதிய திட்ட மசோதாவை அந்நாட்டு பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் புதன்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், "இந்தக் குழப்பமான சூழலில், மசோதா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது மட்டுமே மிச்சம் உள்ளது. மசோதாவுக்கு ஆதரவு இல்லையெனில் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்றார்.

இதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் 229 எம்.பி.க்கள் ஆதரவாகவும் 64 பேர் எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் ஒருமனதாக ஐரோப்பிய யூனியன் திட்டங்களுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளின் ஒப்புதலோடு மசோதா நிறைவேறியது.

இந்த மசோதாவில் வருவாய் வரியை அதிகரிப்பது, முதியோர் ஓய்வூதியங்களைக் குறைப்பது, செலவீனங்களை கட்டுப்படுத்துவது, ஊழியர்களுக்கான சலுகைகளை திரும்பப் பெறுவது என பல திட்டங்கள் இடம்பெறுகின்றன. மசோதாவுக்கு சிப்ரஸின் கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உட்கட்சிக் கூட்டத்துக்கு பின்னர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டது.

ஆனால், மசோதா நிறைவேறும் வேளையில், கிரீஸ் நாடாளுமன்றத்துக்கு எதிரே சுமார் 12,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

SCROLL FOR NEXT