உலகம்

1370 ஆண்டு பழமையான `குரான்’ கண்டுபிடிப்பு

பிடிஐ

இங்கிலாந்து நூலகத்தில், 1370 ஆண்டுக்கு முந்தைய குரான் புத்தகத்தின் சிதைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் பிர்மிங்காம் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள புத்தகங்களை, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது முஸ்லிம்களின் புனித நூலான குரானின் சிதைந்த பகுதிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த குரான் கையெழுத்துப்படியாக உள்ளது. பழங்கால அரபி எழுத்துகளால் அத்தியாயம் 18 முதல் 20 வரை எழுதப்பட்டுள்ளது.

இந்த குரான் கையெழுத்து படியை ரேடியோகார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி இதன் காலத்தை அறிய முயற்சி மேற்கொண்டனர். அப்போது, இது கி.பி. 568 அல்லது கி.பி. 645-ம் ஆண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று 95.4 சதவீதம் உறுதியானதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வை ஆக்ஸ்போர்ட்டு பல்லைக்கழத்தில் உள்ள ஆய்வகத்தில் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT