உலகம்

3-வது முறையாக கடன் மீட்புத் திட்டம்: கிரீஸுக்கு ரூ.70 ஆயிரம் கோடி வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்வது கட்டாயம்

பிடிஐ

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸுக்கு ரூ.70 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புக் கொண்டுள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை கிரீஸ் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் இந்த தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 17 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இக்கடனை கிரீஸ் 3 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இப்போது 3-வது முறையாக கிரீஸுக்கு ஐரோப்பிய யூனியன் பெரும் தொகையை கடன் மீட்புத் திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.

இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் இருந்தும், யூரோ கரன்சியில் இருந்து கிரீஸ் வெளி யேறுவதும் தடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் ஒட்டுமொத்தமாக திவாலா காமலும் தப்பியுள்ளது.

முன்னதாக கடந்த முறை வழங் கப்பட்ட கடனுக்கான தவணைத் தொகையை கூட செலுத்த முடி யாத நிலை கடந்த மாத இறுதியில் ஏற்பட்டது. இதையடுத்து கிரீஸ் கடுமையான சிக்கன நடவடிக் கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி உள் ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தின.

அதனை ஏற்பது குறித்து கிரீஸ் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கடன் மீட்புக்கான சிக்கன நடவடிக்கையை கிரீஸ் மக்கள் நிராகரித்தனர். இடதுசாரி கொள்கையை உடைய அந்நாட்டின் பிரதமர் அலெக்சிஸும் இதற்கு ஆதரவாக இருந்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டம் பெல்ஜியத்தின் பிரெ ஸெல்ஸ் நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள், நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் கிரீஸுக்கு மீண்டும் கடன் மீட்புத் திட்ட நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் இது குறித்து ட்விட்டரில் கூறியுள்ளது: “யூரோ உச்சி மாநாட்டில் ஒருமனதாக உடன்பாடு எட்டப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்களுடன் கிரீஸுக்கு நிதி உதவி அளிக்க உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

புதிய திட்டப்படி கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும். சீர்படுத்தப்பட்ட சட்டங்கள் கிரீஸ் நாடாளுமன்றத்தில் உடனே நிறை வேற்றப்பட வேண்டும். பொருளா தார சீர்திருத்தம் செயல்படுத்தப் பட்டால் கிரீஸுக்கு மேலும் கடன் வழங்கவும் ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

முன்னதாக கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கிரீஸ் வங்கிகள் இரு வாரங்களாக மூடப்பட்டன. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளா னார்கள்.

SCROLL FOR NEXT