உலகம்

எகிப்தில் ஐஎஸ் தாக்குதல்: 70 பேர் பலி

பிடிஐ

சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் எகிப்து நாட்டிலும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எகிப்தின் சினாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட ராணுவ முகாம்கள் மீது நேற்று காலை திடீரென தாக்குதல் நடத்தினர்.

உஷார் அடைந்த வீரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதற்கிடையில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் மோதி தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையில் 8 மணி நேரத்துக்கு மேல் பயங்கர சண்டை நடந்தது. இதில் 60 வீரர்கள் உட்பட 70 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனடியாக எகிப்து விமானப் படையினர் எப்.16 ரக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் விரைந்து வந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

          
SCROLL FOR NEXT