ஜாவா தீவுப்பகுதியில் உள்ள மவுண்ட் ராங் என்ற எரிமலை வெடித்து அதிலிருந்து சாம்பலும் கற்களும் சுமார் 2000 மீ (6,560 அடி) உயரத்துக்கு பறந்தன. மேலும் கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கமாலாமா எரிமலையும் சீற்றம் கண்டது.
இந்த இரண்டு எரிமலைச் சீற்றங்களினால் இந்தோனேசியாவின் மிக முக்கிய விமான நிலையம் உட்பட 3 விமானநிலையங்கள் மூடப்பட்டன.
கிழக்கு ஜாவா நகர்களான சுரபயா, மற்றும் மலாங் ஆகியவை சீற்றமடைந்த ராங் எரிமலைக்கு அருகில் உள்ளது. இதனால் இந்த இரு நகரங்களில் உள்ள ஜுவாந்தா மற்றும் அப்துர் ரஹ்மான் சாலே விமான நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டன.
அதே போல் கமாலானா எரிமலை சீற்றம் காரணமாக வடக்கு மலுக்கு மாகாணத்தின் சுல்தான் பாபுல்லா விமான நிலையமும் மூடப்பட்டது. எரிமலை சாம்பல் புகை விமான இஞ்ஜின்களுக்கு கேடு விளைவிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.