உலகம்

உக்ரைனில் மீண்டும் உள்நாட்டுப் போர் அபாயம்

செய்திப்பிரிவு

உக்ரைனில் அரசுப் படைகளும் கிளர்ச்சிப் படைகளும் எல்லையில் ஆயுதங்களை குவித்து வருவதால் அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

உக்ரைனின் கிழக்குப் பகுதி யில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படை யினர் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளின் சமரசத்தால் தற்போது அங்கு சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது.

பதற்றமான பகுதிகளை ஐரோப் பாவின் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் மேற்பார்வையிட்டு வருகின்றனர். அந்த குழுவின் துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஹக் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த சில வாரங்களாக எல்லைப் பகுதிகளில் அரசுப் படை களும் கிளர்ச்சிப் படைகளும் ஆயுதங்களை குவித்து வருகின்ற னர். இதனால் அங்கு அசாதாரண மான சூழ்நிலை நிலவுகிறது.உக்ரைன், ரஷ்யாவுக்கு இடையி லான எல்லைப் பகுதியை கண்காணிப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்றார்.

உக்ரைன் உள்நாட்டுப் போரில் இதுவரை 6400 பேர் உயிரிழந் துள்ளனர்.

SCROLL FOR NEXT