நைஜீரிய நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இளம் பெண்களை மீட்கும் பணியில் உதவ சீனா, பிரிட்டன் நாடுகள் முன்வந்துள்ளன.
நைஜீரிய நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் சுமார் 300 இளம் மாணவிகளைக் கடத்திச் சென்றனர். அவர்களை, பாலியல் தொழிலுக்கு விற்கப்போவதாகவும் மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இளம் மாணவிகளை மீட்கும் பணியில் உயர் தொழில்நுட்ப உதவிகளை செய்ய உள்ளதாக சீனா மற்றும் பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து சீன அரசு செய்தி நிறுவனம் சினுவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நைஜீரிய இளம்பெண்களை மீட்கும் பணியில் சீனா உதவ இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விகாரத்தில் சீன செயற்கைகோள்கள் கண்டறியும் தகவல்களை நைஜீரிய பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜோனத்தானிடம் சீன அதிபர் லீ கெகியாங் கூறியுள்ளார்.
இதேபோல் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் நைஜீரியாவுக்கு உதவ முன்வந்துள்ளார்.