உலகம்

நல் வசதிகளைப் பெற, கருத்தரித்ததுபோல நடித்த பாண்டா கரடி

செய்திப்பிரிவு

தைவான் நாட்டு மிருகக் காட்சி சாலையில் இருக்கும் பெண் பாண்டா கரடி ஒன்று, கோடைக்காலத்தில் எல்லா வசதிகளையும் பெறுவதற்காகத் கருத்தரித்தது போல நடித்துள்ளது.

இன்னுமொரு பாண்டா கரடிக் குட்டியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தைவான் நாட்டைச் சேர்ந்த தைபே மிருகக்காட்சி சாலை ஊழியர்கள், இதையறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

யுவன் என்ற பெயர் கொண்ட அப்பெண் பாண்டா, ஜூன் 11--ம் தேதியில் இருந்து கர்ப்பமாக இருப்பதற்கான பசியின்மை, கருப்பை தடித்தல், புரோஜெஸ்ட்டிரோன் செறிவு ஆகிய அறிகுறிகளைக் காண்பித்திருக்கிறது.

11 வயதான யுவன் பாண்டா கரடியின் கருப்பையில், மார்ச் மாதத்தில் செயற்கை முறையில் விந்தணு செலுத்தப்பட்டது.

கருத்தரித்த நிலையில் இருக்கும் பாண்டாக்கள், மிருகக்காட்சி சாலையின் ஏசி வசதி செய்யப்பட்ட தனி அறையில் பாதுகாக்கப்படும். அவை உண்ணுவதற்கு அதிகளவில் பழங்களும், மூங்கில்களும் வழங்கப்பட்டு நல்ல முறையில் கவனித்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT