உலகம்

தீவிரவாதி லக்வி விடுவிக்கப்பட்ட விவகாரம்: பாகிஸ்தான் மீது நடவடிக்கை கோரும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா குறுக்கீடு

பிடிஐ

மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஜகியூர் ரஹ்மான் லக்வி விடுதலை செய் யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ் தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஐ.நா.விடம் இந்தியா முறையிட்டுள்ளது. ஆனால் அதை தடுக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

2008 நவம்பர் 26-ல் மும்பை யில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் லக்வி.

இந்தியாவின் வற்புறுத்தல் காரணமாக லக்வியையும் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் பாகிஸ் தான் போலீஸார் கைது செய்த னர். ராவல்பிண்டி சிறையில் இருந்த அவருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அவர் மனைவி யுடன் சிறையிலேயே குடும்பம் நடத்தி ஒரு மகனை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஏப்ரலில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து லக்வியை மீண்டும் கைது செய்ய நட வடிக்கை எடுக்கக் வேண்டும் என்று ஐ.நா. சபையின் தீவிரவாத தடுப்பு குழுவிடம் இந்தியா முறை யிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபை சார்பில் பாகிஸ்தான் அரசிடம் விளக்கம் கோரப்பட் டுள்ளது.

தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கும் ஐ.நா. தீவிரவாத தடுப்பு குழுவில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தமல்லாத நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் லக்வியை மீண்டும் கைது செய்ய அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரவாக கருத்து தெரி வித்துள்ளன. ஆனால் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லக்விக்கு எதிராக போதிய ஆதா ரங்களை இந்தியா அளிக்க வில்லை என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைகாலமாக பாகிஸ்தா னோடு சீனா மிக அதிகமாக நெருக் கம் காட்டி வருகிறது. எனவே அந்த நாட்டுக்கு ஆதரவாக ஐ.நா. சபை யில் சீனா வாதிட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT