பிரான்ஸ் நாட்டு நிதி அமைச்சர்களையும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான என்.எஸ்.ஏ. உளவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
2011 முதல் 2014 வரை அடுத்தடுத்து பிரான்ஸ் நாட்டு நிதி அமைச்சர்களாக இருந்த பிரான்சிஸ் பெராயின் மற்றும் பியேரி மாஸ்கோவிகி போன்ற நிதி அமைச்சர்கள் மேற்கொண்ட ஏற்றுமதி ஒப்பந்தங்கள், வணிகம் மற்றும் நாட்டின் நிதிநிலை ஆய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை என்.எஸ்.ஏ. உளவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் தனது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, 2006 முதல் 2012 வரையில் பிரான்ஸ் அதிபர் பதவி வகித்தவர்களின் உரையாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டுகேட்டு உளவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்தது. இதனை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது. அடுத்தடுத்து பல பகிரங்க ஆவணங்கள் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.