உலகம்

வன்முறையாக வெடித்தது வேலைநிறுத்த போராட்டம்: உபேர் கால் டாக்ஸிக்கு பிரான்ஸ் தடை

பிடிஐ

உபேர் கால்டாக்ஸி நிறுவனம் பிரான்ஸில் செயல்படுவதற்கு அந்நாட்டு இதர டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் உபேர் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

அதேசமயம் வன்முறைச் சம்பவங்களுக்கு அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் உபேர் கால்டாக்ஸி நிறுவனம் செயல் படுவதற்கு எதிராக, நாடு முழுவதும் இதர டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்ஸிகளை ஆங்காங்கு நிறுத்தி வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளனர். ரயில்சேவைகளும் பாதிக்கப் பட்டுள்ளன. சாதாரண டாக்ஸி களை விட உபேர் குறைவான கட்டணத்தை வசூலிப்பதால், மற்றவர்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி இதர டாக்ஸி ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று முன்தினம் நாடு முழுவதும் டாக்ஸி ஓட்டுநர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் இறங்கினர்.

இப்போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் சாலைகளில் சென்ற வாகனங்களை அடித்து நொறுக் கினர். பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

சாலைகளில் வாகனங்கள் நொறுக்கப்பட்டு தீக்கிரையாக் கப்பட்டன. டயர்களை குவித்து வைத்து தீ வைத்து எரித்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.பிரான்ஸில் நேற்று போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

உபேர் டாக்ஸி டிரைவர்களும் மற்ற டிரைவர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 70 வாகனங்கள் சேதமடைந்தன. 7 காவலர்கள் காயமடைந்தனர். 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, உபேர் கால்டாக்ஸி நிறுவனம் செயல்படுவதற்கு அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே தடை விதித்து உத்தரவிட்டார். அதேசமயம் வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர் இதுதொடர்பாகக் கூறும்போது, “பிரான்ஸ் போன்ற ஜனநாயக நாட்டில் இதுபோன்ற வன்முறை களை ஏற்க முடியாது. உபேர் நிறுவன செயல்பாடு பிரான்ஸில் நிறுத்தப்பட வேண்டும். மீறி இயங் கினால் அது சட்டவிரோதம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி முதலே பிரான் ஸில் உபேர் செயல்பட தடை இருந்தது. இருப்பினும் அதைச் செயல்படுத்துவதில் சட்ட சிக்கல் கள் இருந்ததால், தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

உள்துறை அமைச்சர் பெர் னார்டு காஸநீவ் கூறும்போது, “ உபேர் நிறுவனம் சட்டவிரோத மானது, அது மூடப்பட வேண் டும். மீறி இயக்கப்பட்டால் அவற் றைப் பறிமுதல் செய்ய உத்தர விடப்பட்டுள்ளது, காட்டாட்சியை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT