உலகம்

சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் 70 அமைப்புகள் பங்கேற்க முடிவு

பிடிஐ

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள முதல் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் 70-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்க முடிவு செய்துள் ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஐ.நா. அறிவித்தது.

இதன்படி, இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் முதல் யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், சிறந்த இந்தியாவுக்கான வெளிநாடுவாழ் தன்னார்வலர்கள் அமைப்பு (ஓவிபிஐ), வரும் 21-ம் தேதி அமெரிக்காவில் உள்ள 100 நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு இன அமைப்புகள், யோகா ஸ்டுடி யோக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக ஓவிபிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர் பாக இணையதளம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

          
SCROLL FOR NEXT