தினமும் சராசரியாக 10 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட் டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது சமீபத்திய ஆய்வில் கண் டறியப்பட்டுள்ளது. இதேபோல வால்நட், முந்திரி உள்ளிட்ட கொட்டை வகை உணவுகளும் இதே பலனைத் தரக்கூடியவை. எனினும் விலை என்று ஒப்பிடும்போது நிலக் கடலை அனைவரும் எளிதில் வாங்க முடியும் பொருளாக உள்ளது.
நிலக்கடலை மற்றும் கொட்டை வகை உணவுப் பொருட்கள் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும், நீண்ட ஆயுளுக்கும் எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பது குறித்து நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச்ட் பல்கலைக்கழக பேராசிரியர் பூட் வான் டி பிராண்ட் தலைமையிலான குழு 1986-ம் ஆண்டு முதல் ஆய்வு செய்தது.
அப்போது முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் முக்கியமாக 55 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களை மையமாக வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் சராசரியாக நாள்தோறும் 10 கிராம் அளவுக்கு நிலக்கடலை அல்லது கொட்டை வகை உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு கேன்சர், சர்க்கரை வியாதி, சுவாசப் பிரச்சினைகள் குறைவாகவே ஏற் பட்டுள்ளன.
இதனால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது. நிலக்கடலையில் உள்ள கொழுப்பு அமிலங்கள், பல வகை வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பல்வேறு வகை பயோ ஆக்டிவ் ஆக்கக்கூறுகள் பலவகை நன்மைகளை அளிக்கின்றன.
முக்கியமாக ஆன்டிஆக்ஸி டன்ட், திசுக்கள் விரைவாக முதுமையடையும் தன்மையை குறைக்கிறது. இதனால் முதுமை தள்ளிப்போகிறது. நோய்கள் வராமலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தடுக்கிறது. அதே நேரத்தில் நிலக் கடலையுடன் பிற பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் நிலக் கடலை வெண்ணெயை (பீநட் பட்டர்) சாப்பிடுவதால் இந்த பலன் கிடைக்காது.
இதற்கு முன்பு அமெரிக்கா மற்றும் ஆசியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலக்கடலை, கொட்டை உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இதய ரத்தக் குழா யில் அடைப்பு போன்ற பிரச்சினை ஏற்படும் கண்டறியப்பட்டுள்ளது.
இப்போதைய ஆய்விலும் கூட அதிகமாக நிலக்கடலை, கொட்டை வகை உணவுகளை சாப்பிடுவதால் பலன் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.