உலகம்

சவுதி: வலைப்பதிவருக்கு 10 ஆண்டு சிறை, 1,000 சவுக்கடி உறுதி

ஏஎஃப்பி

சவுதி அரேபியாவில் கடவுள் மறுப்பு கொள்கைகள் குறித்து எழுதிய வலைப்பதிவாளருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை மற்றும் 1000 சவுக்கடி தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தியதாக ராய்ஃப் பதாவிக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் 1000 சவுக்கடிகளையும் வழங்கிய தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இத்துடன் சிறை தண்டனைக்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு வெளிநாடுகள் பயணிக்கவும் ரொக்க அபராதத்தையும் வழங்கப்பட்டுள்ளது.

கடவுள் மறுப்பு கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பு வலைத்தளத்தில் எழுதி வந்தவர் ராய்ஃப் பதாவி. சவுதி நாட்டு தொழில்நுட்ப சட்டத்தின் பேரில் முஸ்லிம் சமூகத்தை இழிவுப்படுத்தியதாக இவர் கடந்த 2012-ல் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அந்நாட்டு சட்டத்தின்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு 50 கசையடிகள் வழங்கப்பட்டது.

இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து சவுதி அரசு சவுக்கடி தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு, தண்டனையை மறுஆய்வுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT