அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீ பரவி வருவதால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தஞ் சமடைந்துள்ளனர்.
கலிபோர்னியாவில் கோடைக் காலத்தில் ஆண்டு தோறும் காட்டுத் தீ பரவுவது வழக்கம். இம்முறைமாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் தீ பரவி வருகிறது. அப்பகுதி யில் வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மிகவும் முக்கியமான வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மூடப்பட் டுள்ளது. தீ காரணமாக சான் டியோகோ பகுதியைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரை அங்கிருந்து வெளியேறுமாறு செவ்வாய்க் கிழமை இரவு அதிகாரிகள் உத்தர விட்டனர். எனினும், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. ஆனால், லாஸ் எஞ்சலீஸ் மற்றும் சான் டியாகோவுக்கு இடையே உள்ள பென்டல்டன் ராணுவ தளம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மீண்டும் தீ வேகமாக பரவியது. எனவே அப்பகுதியிலிருந்தவர்கள் வெளியேறுமாறு உத்தர விடப்பட்டது.
கடற்கரையை ஒட்டி அமைந் துள்ள கால்ஸ்பேட் நகரில் உள்ள சில வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. இதையடுத்து, அப்பகுதியில் வசித்தவர்கள் மற்றும் லெகோலேண்ட் பொழுது போக்கு பூங்காவில் இருந்த சுற்றுலாப் பயணிகள் ஆகிய அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.