உலகம்

முபாரக் வழக்கில் மறு விசாரணை

செய்திப்பிரிவு

எகிப்தில் புரட்சியாளர்கள் கொல்லப் பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக்கிடம் மீண்டும் விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

எகிப்தில் 2011ம் ஆண்டு அப் போதைய அதிபராக இருந்த ஹோசினி முபாரக் அரசை எதிர்த்து புரட்சியாளர்கள் போராட்டம் நடத்தி னர். அவர்களில் பலர் கொல்லப்பட் டனர். அதைத் தொடர்ந்து முபாரக் கின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு புதிய அரசு பதவி யேற்றவுடன், இந்தக் கொலைக் குற்றம் தொடர்பாக முபாரக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனை விசாரித்த கீழமை நீதிமன்றம் ஒன்று, இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் மீண்டும் முபாரக்கை விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை வரும் நவம்பர் 5ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT