உலகம்

நிலவைச் சூழ்ந்துள்ள நிரந்தர தூசு மேகம்

பிடிஐ

நிலவைச் சுற்றி நிரந்தரமான தூசு மேகம் படர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தூசு மேகம் ஒரே அடர்த்தி கொண்டிராமல், ஒருபுறம் லேசானதாக இருக்கிறது.

கொலராடோ பவுல்டர் பல்கலைக் கழக இயற்பியல் துறை பேராசிரியர் மிஹாலி ஹொரான்யி தலைமையிலான ஆய்வுக் குழுவி னர் இதனைக் கண்டறிந்துள்ளனர்.

விண்கல் மழை பொழியும் போது, அவை நிலவின் மேற்பரப் பைத் தாக்கும்போது புழுதி எழுந்து தூசு மேகத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கின்றன.

இந்த தூசு மேகம், பெரும் பாலும் சிறு துகள்களால் நிரம்பி யிருக்கிறது. விண்கல்லின் மிகச் சிறு பகுதி நிலவின் மேற்பரப்பைத் தாக்கினாலும், அது ஆயிரக் கணக்கான சிறு தூசுகளை எழும்பச் செய்கிறது. இதுபோன்ற தொடர்ச்சியான நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்பு தூசு மேகத்தை தொடர்ந்து தக்க வைக்கிறது.

கடந்த 2013 செப்டம்பரில் நிலவை ஆய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட நாசாவின் லேடீ (எல்ஏடிஇஇ) என்ற ஆய்வுக் கலம் அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் இது கண்டறியப் பட்டுள்ளது.

“சூரியக் குடும்பத்தில் தூசுக் களைப் பற்றி ஆய்வு செய்வது, எதிர்காலத்தில் விண்கலம் அல்லது விண்வெளி வீரர்களுக்கு தூசுகளால் பாதிப்பு ஏற்படுவதி லிருந்து தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும்” என ஹொரான்யி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT