உலகம்

இரானில் மது அடிமைகளை மீட்க 150 சிகிச்சை மையங்கள்

செய்திப்பிரிவு

இரானில் மது அடிமைகளை மீட்க 150 சிகிச்சை மையங்களை உருவாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இரானில் மது குடிப்பது சட்டவிரோதமாகும். எனினும் அங்கு மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

இரானில் 1979-ம் ஆண்டு மதுவுக்கு தடை விதிக்கப்பட்டு, மது குடிப்பது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இரானில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. அவர்களை பிரார்த்தனையில் பயன்படுத்த ஓயின் தயாரித்துக் கொள்ள அனுமதி உண்டு.

துருக்கி, குர்திஷ் மற்றும் இராக் கின் ஒருசில பகுதிகளில் இருந்து இரானுக்கு மது கடத்தப்படுகிறது. இதனால் திருட்டுத்தனமாக மது அருந்துபவர்களை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவர்களை கடும் தண்டனைகளால் திருத்த முடியாது என்பதால் மது போதை மீட்புக்கான சிகிச்சை மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT