உலகம்

குவைத் ஷியா மசூதி மீது ஐ.எஸ். வெடிகுண்டு தாக்குதல்: பலர் பலி என அச்சம்

ஏபி, ஏஎஃப்பி

குவைத் நகரில் நெரிசலான பகுதியில் ஷியா மசூதி மீது பயங்கரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் 25 பேர் பலியாகி 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. வெள்ளிக்கிழமை வழக்கமான வழிபாடுகள் முடிந்த நிலையில் இந்த பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 25 பேர் பலியாகியிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சன்னி முஸ்லிம்களுக்கு ஷியா இஸ்லாமியத்தை பிரச்சாரம் செய்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதியில் உள்ள ஐ.எஸ். தொடர்புடைய நஜ்த் பிராவின்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு மொகமது அல்-ஃபைலி என்பவர் கூறும்போது, தன்னுடைய 70 வயது தந்தை இந்த பயங்கர குண்டு வெடிப்பில் பலியானதாக தெரிவித்தார். மேலும் இவரது 2 சகோதரர்களும் காயமடைந்துள்ளனர். தான் அந்த சமயத்தில் மசூதியில் இல்லாததால் பிழைத்ததாக அவர் தெரிவித்தார்.

இமாம் சாதிக் மசூதியில் இந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. குவைத் நகரின் பெரிய ஷாப்பிங் பகுதியாகும் இது.

இதுவரை 13 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. மசூதியிலிருந்து காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு கொண்டு வரப்படுவது மட்டும் தெரிவதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT