உலகம்

வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்

ஐஏஎன்எஸ்

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், தினமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடப்பது வழக்கம். இதற்காக செய்தியாளர்கள் அனைவரும் அறையில் காத்திருக்கும்போது, அந்த அறையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி வெள்ளை மாளிகை அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் அனைவரையும் அவசரமாக வெளியேற்றினர்.

சட்டப் பிரிவு மையத்துக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு ஒன்றில் மாளிகையின் பிரஸ் ரூமில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர், பல மணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT