உலகம்

ரம்ஜான் மாதத்தில் தூக்கு தண்டனைகளை நிறுத்தி வைத்து பாக். உத்தரவு

பிடிஐ

முஸ்லிம்கள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கும் ரம்ஜான் மாதத்தில், மரண தண்டனைக் கைதிகளை தூக்கிலிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு மாகாண அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நிலவு தென்படுவதை முன்னிட்டு வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை ரம்ஜான் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ரம்ஜான் மாதத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

பெஷாவரில் பள்ளிக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக அமலில் இருந்த மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தற் காலிகத் தடையை பாகிஸ்தான் அரசு தளர்த்தியது.

கடந்த 6 மாதத்தில் 150 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத் தடை காரணமாக, ஷஃப்கத் ஹுசைன் என்ற குற்றவாளி மரண தண்டனையிலிருந்து தற்காலிக மாக தப்பியுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு கராச்சியில் 7 வயது குழந்தை யைக் கடத்தி கொலை செய்த தற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டது.

ஆனால், குற்றம் நடைபெற்ற போது ஹுசைனுக்கு 18 வயது பூர்த்தியடையாததால், சிறார் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது என ஒரு தரப்பினர் போராடி வருகின்றனர்.

ஆனால், அரசுத்தரப்பு அவர் கொலைக்குற்றவாளி என்பதை உறுதி செய்து, மரண தண்டனை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.

ஹுசைனின் மரண தண்டனை ஏற்கெனவே நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT