நிகராகுவா நாட்டின் குறுக்காக மிகப் பெரிய கால்வாயை வெட்டி அட்லான்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் புதிய திட்டத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகராகுவா மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பனாமா கால்வாயை விட நீளமாகவும் அகலமாகவும் ஆழமாகவும், சுமார் 3,20,000 கோடி ரூபாய் செலவில் இக்கால்வாயை வெட்டும் பணியைச் சீன நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
சுற்றுச்சூழலை இது வெகுவாகப் பாதிக்கும் என்று விவசாயிகள், கிராமவாசிகள், சூழலியலாளர்கள் எதிர்க்கின்றனர்.
டிசம்பரில் தொடங்கிய இந்த வேலை 5 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்று அதிபர் டேனியல் ஓர்டேகா கூறுகிறார்.