உலகம்

போர்ப்ஸ் பட்டியலில் 9 இந்திய நிறுவனங்கள்

செய்திப்பிரிவு

புதுமையான உத்திகளைக் கையாண்டு வெற்றி பெற்ற நிறுவனங்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 9 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜீரோ என்ற நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கோத்ரெஜ் நிறுவனம் 31-வது இடத்தில் உள்ளது.

ஏ.பி.பி. இந்தியா, மேரிகோ, யூனைடெட் பிரைவரிஸ், சியமன்ஸ் இந்தியா, ஏசியன் பெயிண்ட், நெஸ்டில் இந்தியா, கோல்கேட் பால்மோலிவ் இந்தியா, திவிலேப்ஸ் ஆகிய நிறுவனங்களும் போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

SCROLL FOR NEXT