சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வியட்நாம் மீன்பிடி கப்பலை, சீனக் கப்பல் மோதி மூழ்கடித்தது.
தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பணப் பணிக் கான ஆயத்தப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த இடத்தை தங்களுக்குச் சொந்தம் என்று வியட்நாம் கூறிவரும் நிலை யில், சீனாவின் அத்துமீறலுக்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த பகுதியில் வியட்நாமின் கட லோரக் காவல் படைகளைச் சேர்ந்த கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடு பட்டு வருகின்றன. இந்நிலையில், வியட்நாம் கப்பலை சீனக் கப்பல் தாக்கி மூழ்கடித்துள்ளது.
வியட்நாம் கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்கள் நாட்டைச் சேர்ந்த மீன்பிடி கப்பல் மீது மோதி, அதை மூழ்கடித்துள்ளனர். அதிலிருந்த 10 மீனவர்களும் மீட்கப்பட்டு பாது காப்பாக உள்ளனர்” என்றார்.
தங்களுக்குச் சொந்தமான கடல் பகுதியில் எண்ணெய் துரப் பண பணியை சீனா மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதற்கு வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு வியட்நாமில் சீனர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது.