சுடோகு எண் கணித புதிரை விடு விக்கும் தனது கம்ப்யூட்டர் புரொ கிராமை சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், பேஸ்புக்கில் வெளி யிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது 63 வயதாகும் லீ, பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணித பட்டப்படிப்பில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றவர். சி பிளஸ் பிளஸ் மொழியில் சுடோகு கணிதப் புதிரை தீர்க்கும் புரொகிராமை அவர் எழுதியுள்ளார்.
இதனை “ஸ்கிரீன் ஷாட்” எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம் என்று தன்னை பேஸ்புக்கில் பின் தொடர்பவர்களுக்கு லீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுவரை 45 ஆயிரம் பேர் அதற்கு “லைக்” போட்டுள்ளனர். 15 ஆயிரம் பேர் அதனை பகிர்ந்து கொண்டுள்ளனர். லீயின் புரொகிராம் திறமையை பலரும் பாராட்டி யுள்ளனர்.
உலகில் வேறு எந்த பிரதமருக் கும் கம்ப்யூட்டரில் புரொகிராம் எழுத தெரியாமா என்பது எனக்குத் தெரியவில்லை என்று ஒருவர் வியப்பு தெரிவித்துள்ளார்.