அமெரிக்கர்களிடையே சீக்கியர் பற்றி நல்ல கண்ணோட் டம் ஏற்பட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் ஆலோசகரை சீக்கியர்கள் பணியமர்த்தியுள்ளனர்.
அமெரிக்காவில் டர்பனுடன் சுற்றும் சீக்கியர்கள் குறித்து அமெரிக்கர்கள் சிலரிடையே தவறான எண்ணங்கள் உள்ளன. தீவிரவாதிகள் எனக் கருதியும், இனத் துவேஷத்துடனும் சீக்கியர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதையடுத்து, தேசிய சீக்கியப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒருவகையான கருத்துக் கணிப்பு ஆகும். சீக்கியர் பற்றிய அமெரிக்கர்களின் புரிதல் தொடர்பான கருத்துகளைச் சேகரித்து, அதன் அடிப்படை யில் சீக்கியர் பற்றிய தவறான எண்ணைத்தைக் களைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்பணிக்கு உதவ, ஹிலாரி கிளிண்டனின் அதிபர் பிரச்சார ஆலோசகரான ஜெப்ரி காரின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அதிபர் ஒபாமாவின் பிரச்சாரத்தின் போது உத்திப்பூர்வ ஆலோசகராக இருந்தவர்.
இப்பிரச்சாரத்தின் செயல் இயக்குநர் குர்வின் சிங் அகுஜா கூறுகையில், “அமெரிக்க அரசியல் மற்றும் கொள்கை ஆய்வுகளில் மிகச்சிறந்த நிபுணத்துவம் பெற்ற ஜெப்ரி காரினிடம் இப்பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். இந்தத் தலைமுறையில் மிகச்சிறந்த கருத்துக் கணிப்பாளர் அவர் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் வட அமெரிக்காவில் சீக்கியர் கள் குடியேறத் தொடங்கிய பின், அமெரிக்காவின் ஓர் அங்கமாகவே சீக்கியர்கள் மாறிவிட்டனர். சீக்கியர்கள் எவ்வளவு இன்றியமையாதவர்கள், சீக்கிய சமூகம் பற்றித் தவறான கண் ணோட்டம் எப்படி உள்ளது என்பது பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஜெப்ரிகாரினைத் தவிர வேறுயாரும் பொருத்தமான வர்கள் இல்லை என்றே கருது கிறோம்” என்றார்.