உலகம்

வங்கதேசத்தில் கோக-கோலா ஊழியர் உட்பட இருவர் கைது: ஐ.எஸ் தொடர்பு இருப்பதாக சந்தேகம்

ஏபி

வங்கதேசத்தில் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர் அதில் ஒருவர் கோக-கோலா நிறுவனத்தின் ஊழியர் ஆவார்.

அமினுல் இஸ்லாம் (38) என்ற இளைஞர் தடை செய்யப்பட்ட வங்காள ஜமாதுல் முஜாகுதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மற்றொரு நபரான சாமிக் கமல் என்ற மற்றொருவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்யப்பட்ட நபரில் ஒருவர் தங்களது ஊழியர் தான் என்று கோக-கோலா நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT