கணவரின் 2வது திருமணத்துக்கு பழிவாங்க, சவுதி அரேபிய பெண் ஒருவர் சாலை விதிகளை மீறி கணவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்துள்ளார்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அண்மையில் 2வது திருமணம் செய்தார். இதனால் அவரது முதல் மனைவி கடும் அதிருப்தி அடைந்தார். ஆனால் அவரால் நேரிடையாக எதிர்ப்பை தெரிவிக்க முடியவில்லை.
திருமண நாள் அன்று கணவரின் காரை, தனது சகோதரரின் உதவி யுடன் வெளியே ஒட்டிச் சென்றார். அந்த கார் நகரின் அனைத்து சந்திப்புகளிலும் சிவப்பு விளக்கு சிக்னலை மீறி சென்றது.
சவுதி அரேபியாவின் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. அதன்மூலம் சிவப்பு சிக்னலை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து ரூ.8000 முதல் ரூ.15000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கணவரை பழிவாங்க நினைத்த சவுதி பெண்ணும் அவரது சகோதரரும் அந்த நாள் முழுவதும் சிவப்பு சிக்னலை தாண்டி காரை ஓட்டி கொண்டே இருந்தனர். அந்த வகையில் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சந்திப்பில் சிவப்பு சிக்னலை மீறி கார் முன்னும் பின்னும் நகரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.