உலகம்

புளூட்டோ கிரகத்தின் 5 நிலவுகளை படம் பிடித்தது நாசா

பிடிஐ

விண்வெளியில் புளூட்டோ கிரகத் தின் இரு சிறிய நிலவுகள் உட்பட‌ 5 நிலவுகளை முதன்முறையாகப் படம்பிடித்து நாசா விண்கலமான‌ `நியூ ஹாரிசன்' சாதனை படைத் துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு அமெரிக் காவின் விண்வெளி ஆய்வு நிறு வனமான நாசா புளூட்டோ கிரகத்தை ஆய்வு செய்வதற்காக `நியூ ஹாரிசன்' விண்கலத்தை ஏவியது. வரும் ஜூலை 14ம் தேதி அந்த விண்கலம் அந்த கிரகத்துக் குள் நுழைய உள்ளது.

இதற்கிடையில் 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் புளூட்டோ வின் மிகச் சிறிய நிலவுகளான முறையே கெர்பெரோஸ் மற்றும் ஸ்டைக்ஸ் ஆகியவை நாசா விஞ் ஞானிகளால் ஹப்பிள் தொலை நோக்கி மூலம் அடையாளம் காணப்பட்டன.

2013ம் ஆண்டு ஷேரன் என்ற நிலவையும், 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் முறையே ஹைட்ரா மற்றும் நிக்ஸ் ஆகிய நிலவுகளை அந்த விண்கலம் அடையாளம் கண்டது. தற்போது இந்த ஐந்து நிலவு களையும் ஒருங்கே புகைப்படம் எடுத்துள்ளது அந்த விண்கலம்.

இந்த ஆண்டு ஏப்ரல் 25 முதல் மே 1ம் தேதி வரையிலான காலகட்டத்தில் `லாங் ரேஞ்ச் ரெகொன்னெசான்ஸ் இமேஜர்' எனும் கேமராவைப் பயன்படுத்தி இந்த நிலவுக் குடும்பம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதற்கு மேலும் `நியூ ஹாரிசன்' விண்கலம் புதியதாக ஏதேனும் ஒரு நிலவை புளூட்டோவில் கண்டு பிடித்தால், அது மாபெரும் சாதனை யாக அமையும். உலகத்தில் வேறு எவரும் அந்த நிலவுகளை இதற்கு முன்பு கண்டிருக்க முடியாது என்று எங்களால் உரத்துக் கூற முடியும்" என்றார் இந்த ஆய்வாளர்களில் ஒருவரான ஸ்பென்சர்.

SCROLL FOR NEXT