உலகம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற‌ ரஷ்ய விண்கலம் நாளை வெடிக்கிறது

ஏஎஃப்பி

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்கள் எடுத்துச் சென்ற ரஷ்ய விண்கலம் தொழில்நுட்பக் கோளாறுகளால் நாளை வளிமண்டலத்தில் வெடிக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 பேர் கொண்ட குழு இயங்கி வருகிறது. அவர்களுக்காக நீர், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஏப்ரல் 28-ம் தேதி விண்கலம் ஒன்று புறப்பட்டது.

விண்வெளியில் ஏவப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அது பூமியுடனான தொடர்பை இழந்தது.

இதனால் தற்போது கட்டுப் பாட்டை இழந்துள்ள அந்த விண்கலம் நாளை ரஷ்ய நேரப்படி அதிகாலை 1.23 மணி முதல் இரவு 9.55 மணிக்குள் வளிமண்டலத் திலேயே வெடித்துச் சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலிருந்து ஏதேனும் மிச்சம் மீதி பொருட்கள் மட்டும் பூமியை வந்தடையலாம் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஜூன் 19-ம் தேதி விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான பொருட்களுடன் மீண்டும் ஒரு புதிய விண்கலத்தை அமெரிக்காவில் இருந்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT