நேபாளத்தில் கடந்த 25-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்றுவரை மொத்தம் 143 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 7,500 பேர் பலியாகியிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. தாடிங், நுவாகோட் மாவட்டங்களில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்துக்குப் பின்னார் இதுவரை 143 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக நேபாள தேசிய நிலநடுக்க மையத்தின் தலைவர் லோக் பிஜய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் மே 2-ம் தேதி ஏற்பட்ட 2 நில அதிர்வுகளால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.