ஐஎஸ் தீவிரவாதி ஒருவர், புகைப் பிடித்ததற்காக சக தீவிரவாதி களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் நடந்த இந்த சம்பவத்தை அவர்களே பதிவு செய்து வெளி யிட்டுள்ளனர். அதன் விவரம்:
ஒரு சுவருக்கு முன்பு சிலர் வரிசையாக உட்கார்ந்திருக்கின் றனர். அவர்கள் அனைவரும் புகை பிடித்தவர்கள். முகமூடி அணிந்த ஒருவர் அனைவரையும் காலால் காட்டுமிராண்டித்தனமாக எட்டி உதைக்கிறார்.
ஒருகட்டத்தில் திடீ ரென தனது கையில் இருந்த துப் பாக்கியால் குத்துகிறார். மேலும் ஒருவரது தலையில் துப்பாக்கி யின் அடிப்பாகத்தில் உள்ள கட் டையால் அடிப்பது போன்ற காட்சி கள் அதில் இடம்பெற்றுள்ளன.
புகைப்பிடிப்பது இஸ்லாத் துக்கு எதிரானது என்று ஐஎஸ் இயக்கம் கருதுகிறது. இதனால், தங்களது இயக்கத்தில் உள்ள யாரும் புகைப்பிடிக்கக் கூடாது என்பது அந்த அமைப்பின் விதி முறைகளில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், விதியை மீறி புகைப்பிடித்தவர்களுக்கு இது போன்ற கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. தொடர்ந்து விதி களை மீறினால் மரண தண்டனை கூட வழங்கப்படுவதுண்டு.
கடந்த பிப்ரவரி மாதம் சிகரெட் பிடித்ததற் காக ஐஎஸ் போலீஸ் அதிகாரி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.