பெரு நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பாராசூட் உதவியுடன் குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 1,500 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் போது, பாராசூட் விரியாமல் அவர் கழுத்தைச் சுற்றிக் கொண்டது. ஆனால், அவர் சிறு எலும்பு முறிவு கூட ஏற்படாமல் உயிர்தப்பினார்.
இது தொடர்பாக, ராணுவ அவசர சேவைப் பிரிவு மருத்துவர் கூறுகையில், “அமாஸிபியூன் கமார்ரா(31) என்ற வீரர் 1,500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்திலிருந்து பாராசூட் உதவியுடன் குதித்தார்.
பாராசூட் விரியாமல் அவர் கழுத்தைச் சுற்றிக் கொண்டது. சுயநினைவை இழந்த அவர் அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தும் சிறு கீறல் கூட விழாமல் உயிர் பிழைத்தார்.
அவர் உயிருடன் இருப்பது நம்ப முடியாத அதிசயம். அவர் உயிருடன் இருக்க வேண்டு மென்பது கடவுளின் விருப்பம்” என்றார். அமாஸிபியூனுக்கு மருத்துவப் பரிசோதனை நடந்து வருகிறது.